Previous
Download for
Laptop |
Tablet |
SmartPhone |
BasicPhone
This app works offline; all videos are included within the app.
பெண்கள் தங்கள் மருமகள் கர்ப்பமாக இருக்கும்போது, அவரை சிறப்பாக கவனித்து, ஊட்டசத்து நிறைந்த பச்சை காய்கறிகள், பருப்புகள், முட்டைகள், பால் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்ள செய்வேன். ஐயோடைஸ் செய்யப்பட்ட உப்பில் சமைத்த உணவுகள் மற்றும் இரும்பு ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை உட்கொள்ள செய்வேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் தன் மனைவியை பேறுகாலத்தில் கவனமாக பாதுகாப்பேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும். அவரை சரியான நேரத்தில் உணவு உண்ணச்செய்து போதுமான ஓய்வளிப்பேன் என்றும் ஏழாவது மாதம் முதல் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதுடன் வீட்டில் சமைக்கப்பட்ட சத்துணவுகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
பெண்கள் பச்சிளம் குழந்தைக்கு தங்கள் அடர்த்தியான முதல் பால் (சீம்பால்) வழங்குவேன் மற்றும் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே புகட்டுவேன் என்றும் குழந்தை ஏழாவது மாதத்துக்குள் நுழைந்ததும் தாய்ப்பாலுடன் அரோக்கியமான மற்றும் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை வழங்குவேன் என்ற உறுதி மொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
18 வயதுக்கு குறைவான ஒரு பெண் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தாய்மைக்கான பொறுப்பினை சுமக்க தயாராவது இல்லை. அந்த சூழலில், அவளது குழந்தை ஊட்டசத்து குறைபாட்டினால் பாதிப்படையும் ஆபத்து ஏற்படலாம். அதனால் தயவுசெய்து உங்களது மகளுக்கு குறைந்தது 18 வயதாகும் வரை திருமணம் செய்து வைக்க எண்ண வேண்டாம்.
பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு குறைந்தது 18 வயது ஆகும் வரை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதனால் அவளது வருங்கால குழந்தை ஊட்டசத்து குறைபாட்டிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யலாம்.
இளைஞர்கள் 18 வயதுக்கு குறைவான வயதுடைய பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்களது வருங்கால குழந்தை ஊட்டசத்து குறைபாட்டிலிருந்து பாதுகாக்கப்படும்.
பஞ்சாயத்து தலைவி (ஒரு கிராமத்தின் தலைவி) தன் கிராமத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்யப்படுவதை தடுப்பேன் என உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் அவரது கிராமத்தில் எந்த குழந்தையும் ஊட்டசத்து குறைபாட்டுக்கு ஆளாகாமல் மற்றும் அவதிப்படாமல் பாதுகாக்கப்படலாம்.
இந்த காணொலியை உருவாக்கியதன் நோக்கம் ஊட்டசத்து குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் அதன் ஆபத்தான பின் விளைவுகள் மற்றும் சமுதாயத்தை அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க செய்தல் மற்றும் ஊட்டசத்து குறைபாட்டினை தடுக்க செய்ய வேண்டிய எளிதான செயல்களை விளக்குதல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
இது சமுதாயத்தின் பெரிதளவு மக்களுக்கானது
உருவாக்கியவர்கள்: யூனிசெஃப் மற்றும் பல வளர்ச்சி பங்குதாரர்களின் சுறுசுறுப்பான ஆதரவுடன் பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், இந்திய அரசால் தயாரிக்கப்பட்டது.